--- --:--:-- --

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட கணவர்..!

8

ர்கூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பர்கூர் அருகே உள்ள புருஷோத்தமன் பர்கூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

 

அவருடைய மனைவி சுஜாதா சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனைவியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

 

பிறகு வருமாறு மருத்துவர் அனுப்பியதை தொடர்ந்து சுஜாதாவை அங்குள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் இருக்க வைத்துவிட்டு புருஷோத்தமன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். காவல் நிலையத்திற்கு சென்று விட்டு புருசோத்தமன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

 

பின்னர் வீட்டுக்கு வந்து சென்று பார்க்கும் போது சுஜாதா தூக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து அவரும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon