மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கணவனிடம் பணம் பறிக்க முயன்ற இளைஞர்..!
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது கணவரிடம் பணம் பறிக்க முயன்ற சேலம் இளைஞரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவை சேர்ந்த திருமணமான பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது கணவருக்கு அனுப்பிய இளைஞர் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
பணம் கொடுக்காவிட்டால் மனைவியின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாகவும் அந்த இளைஞர் மிரட்டியுள்ளா. ர்மகாராஷ்டிரா காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் மிரட்டல் விடுத்த இளைஞரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
விசாரணையில் பாரதி மிரட்டல் விடுத்த நபர் மைசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. அவனை மகாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்தனர்.






