20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படையினர்..!
சிதம்பரம் அருகே அம்மாபேட்டை வள்ளலார் நகரில் வசித்து வரும் தனலட்சுமி என்ற 88 வயது மூதாட்டி தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார்.
இதுகுறித்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கழுத்தளவு நீரில் சிக்கி தவித்த மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். மேலும் கிணற்றை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் எனவும் தீயணைப்பு துறையினர் அறிவுரை வழங்குகின்றனர்.






