நடிகை ஜனனி செய்த செயலுக்கு குவிந்து வரும் பாராட்டு..!
நடிகை ஜனனி செய்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜனனி. விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜனனிக்கு விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளிவந்த அவன் இவன் திரைப்படம் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தனியார் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் .இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜனனிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவர் ஆரம்பத்தில் நடிக்க வந்ததில் இருந்து அவரது பெயரை ஜனனி அய்யர் என்றுதான் எழுதி வந்தார் பேசி வந்தார். எல்லோரும் அப்படித்தான் அடையாளப்படுத்தியும் வந்தனர். ஆனால் தற்போது திடீரென ஒரு மாற்றத்தை செய்துள்ளார்.
இந்த மாற்றத்தால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய பெயரில் இருந்த சாதியை நீக்கியுள்ளார். மேலும் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.






