--- --:--:-- --

5ஜி தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் – ஜூஹி சாவ்லா

8

விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5ஜி தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்பதால் அதைக் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் என பாலிவுட் நடிகையும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 5ஜி தொழில்நுட்பத்தில் உருவாகும் கதிரியக்கம் மக்களின் உடல் நலத்திற்கு பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என நம்ப தேவையான காரணங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு தான் எதிரி அல்ல என்றும் ஜூகி சாவ்லா குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் 5ஜி தொழில்நுட்பம் மனிதர்களுக்கும் எல்லாவிதமான உயிரினங்களுக்கும் பாதுகாப்பானது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் சான்றளிக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கை தொடுத்துள்ளதாக ஜூஹி சாவ்லா கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon