--- --:--:-- --

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் கொரோனா சிகிச்சை பிரிவினை திறந்து வைத்தார்..!

9

மிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆக்ஜிசன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவினை திறந்து வைத்தார்.

 

தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.5.2021) ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அம்மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள 400 கூடுதல் படுக்கை வசதிகள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 

மேலும் பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 5 மருத்துவர்கள் மற்றும் 5 செவிலியர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

 

இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக திருப்பூர் வந்தார். பின்னர் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஜிசன் வசதியுடன் கூடிய  100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவினை திறந்து வைத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துமிக்க உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

 

தொடர்ந்து  20 கார் ஆம்புலன்ஸ்சேவையினை கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பின்னர்  6 மருத்துவர்களுக்கும்  மற்றும் 4 செவிலியர்களுக்கும்  தற்காலிக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.பின்னர் கோவைக்கு சென்றார்.

 

இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், விஜயகுமார், வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் சி.கதிரவன், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். விஜய கார்த்திகேயன், மருத்துவக்கல்லூரி  டீன் முருகேசன், மாவட்ட போலீஸ் சூப்பரின்டன்டன்ட் திஷா மித்தல் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon