--- --:--:-- --

குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து..!

8

சென்னை கஸ்தூரிபாய் தாய்சேய் நல மருத்துவமனையில் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. கஸ்தூரிபா தாய்சேய் நல மருத்துவமனையில் இரண்டாம் தளத்தில் உள்ள தங்கும் அறையில் மின்கசிவால் தீ பிடித்தது.

 

பின்னர் அருகில் இருந்த பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை மையத்தில் தீ பரவியது. இதனால் அங்கு புகை சூழ்ந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அலறியடித்து வெளியேறினர். அங்கு சிகிச்சையில் இருந்த 47 குழந்தைகள் உடனடியாக வேறு தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

குழந்தைகளை பார்க்க அனுமதிக்காததால் தாய்மார்கள் மருத்துவமனையில் கதறி அழத் துவங்கினார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே அங்கு வந்த தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுகட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் வார்டுக்குள் சென்று பார்த்து குழந்தைகள் நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தினார். இதன் பின் வந்தவர்கள் தாய்மார்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று தங்கள் குழந்தைகளை பார்க்குமாறு கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon