--- --:--:-- --

பிறந்த 10 நாட்களில் தந்தையும், தாயையும் இழந்த குழந்தை..!

5

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இருவரும் உயிரிழந்ததால் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை பெற்றோரை இழந்து தவிப்பது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நஞ்சுண்ட கவுடா மம்தா தம்பதியினருக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

குழந்தை பிறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் மம்தாவின் கணவர் பெருந்தொற்று பாதிப்பிற்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். இதையடுத்து குழந்தை பிறந்ததும் ஐந்து நாட்கள் கழித்து குழந்தையின் தாய் மம்தாவும் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

 

குழந்தையையும் பாதித்த கொரொனா மருத்துவ சிகிச்சைக்கு பலனாக குழந்தை குணமடைந்தது. 9 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் பிறந்த குழந்தையை ஒரு முறை கூட பார்க்காமல் குழந்தையின் தந்தை இறந்ததும் பிரசவமான 5 நாட்களிலேயே குழந்தையை விட்டு தாயும் பிரிந்தார்.

 

தந்தையும், தாயும் இல்லாமல் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தவிப்பது அனைவரின் இதயத்தையும் உருகவைக்கும் சோகமாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon