--- --:--:-- --

முகக் கவசம் அணியாமல் சென்ற பெண்ணை கடுமையாக தாக்கிய போலீசார்..!

8

மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் முகக் கவசம் அணியாமல் சென்ற பெண்ணை போலீசார் கடுமையாக தாக்கி கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சாகர் பகுதியில் பெண் ஒருவர் முக கவசம் அணியாமல் தனது மகளுடன் சாலையில் சென்றுள்ளார்.

 

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் முக கவசம் ஏன் அணியவில்லை என கேட்டுள்ளார். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் வாகனத்தில் ஏற மறுத்து உள்ளார். அந்த பெண்ணை போலீசார் மகள் கண் முன்னே கடுமையாக தாக்கி வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon