புதுச்சேரி ஆட்சியில் திடீர் மாற்றம்..!
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக என்ஆர் காங்கிரஸ் அதிமுக ஓர் அணியாகவும் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் மற்றொரு அணியாகவும் இருந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தது.
இதில் என்ஆர்காங்கிரஸ் 10 இடங்களை பாஜக 6 இடங்களையும் திமுக 6 சுயேச்சைகள் 6 காங்கிரஸ் 2 என வெற்றி பெற்றது. என் ஆர் காங்கிரஸ் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி முதலமைச்சராக பதவி ஏற்றார்.
ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்ற உடன் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் திடீரென பாஜகவை சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமன எம்எல்ஏக்கள் மூன்று பேரையும் சேர்த்து மொத்தம் உள்ள 33 இடங்களில் தற்போது பாஜகவின் பலம் ஒன்பது. சுயேச்சைகள் 6 பேரை சேர்த்தால் பாஜகவின் பலம் 15 ஆக உள்ளது. எனவே பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சி என பேச்சு எழுந்துள்ள நிலையில் ரங்கசாமி தற்போது திமுகவின் ஆதரவை கேட்பதாக பரபரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.






