தமிழிசை சௌந்தர ராஜனுக்கு கொரொனா பரிசோதனை..!
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருக்கு தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிசோதனை செய்து கொண்டார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ரங்கசாமிக்கு கடந்த 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனை தொடர்ந்து உடல் சோர்வுடன் இருந்த ரங்கசாமிக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையிலும் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





