--- --:--:-- --

கொரோனாவுக்கு எதிராக புதிய மருந்து கண்டுபிடிப்பு..!

3

கொரோனாவுக்கு எதிராக டாக்டர் ரெட்டிஸ் உடன் இணைந்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் கண்டுபிடித்த மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

 

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை மேம்படுத்தி வருவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில் இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் இணைந்து புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். 2டி ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த மரத்தை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

 

கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த மருந்து சிறப்பாக செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கட்ட சோதனைகளில் மூலக்கூறுகளால் நோயாளிகளை விரைவாக குணமாக்க முடியும் என்றும் பிராணவாயுவின் தேவையை குறைக்க முடியும் எனவும் தெரியவந்துள்ளது.

 

பவுடர் வடிவிலான இந்த மரத்தை நீரில் கரைத்து பருகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon