நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!
திங்கட்கிழமையன்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் அதிமுக சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 66 இடங்களை வென்று எதிர்க்கட்சி அந்தஸ்து அதிமுக பெற்றுள்ளது.
இந்நிலையில் அந்த கட்சியின் பேரவைத் தலைவர் யார் என்று தேர்ந்தெடுக்க படாமலேயே எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே தமிழக அரசு திங்கள்கிழமை முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இதனால் எந்த ஒரு கூட்டம் நடத்தினாலும் காவல் துறை அனுமதியுடன் தான் நடத்திட வேண்டும். எனவே திங்கட்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திட்டமிட்டவாறு நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது .
அதில் கொரொனா விதிகளை முழுமையாக பின்பற்றி கட்சி தொண்டர்கள் யாரும் பங்கேற்காத வகையில் கூட்டம் நடத்திட வேண்டும் என்று உறுதியளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.




