--- --:--:-- --

அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!

13

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தொடர் மழை காரணமாக நீலகிரியில் சுளித்தவாறு மாரியம்மன் கோவில் மற்றும் மலைப்பகுதிகளில் பெய்த மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர் நிறைந்திருக்கும் அதிக இடங்களில் தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon