--- --:--:-- --

நாளை முதலமைச்சராக பதவி ஏற்கிறார் மம்தா பானர்ஜி..!

10

மூன்றாவது முறையாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாளை பதவியேற்கவுள்ளார்.

 

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக அந்த மாநிலத்தின் முதலமைச்சராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்கிறார்.

 

இதற்கிடையே புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் வகையில் ஆளுநர் சங்கரை சந்தித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

 

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை சட்டமன்ற தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon