--- --:--:-- --

கொரொனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கே முழுமையான தீர்வு..!

8

ழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை செயல்படுத்திவிட்டு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவிப்பதே கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரே வழி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

அதிகரித்து வரும் கொரொனாவை கட்டுப்படுத்துவது எப்படி என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை என்றும் மத்திய அரசின் செயலற்ற தன்மை பல அப்பாவி மக்களை கொன்று வருகிறது என்றும் அவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

தற்போதைய நிலையில் ஏழை, எளிய மக்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச வருமான உறுதி திட்டமான நியாயே செயல்படுத்தி விட்டு நாடு முழுவதும் பொது ஊரடங்கை அறிவிப்பதே கொரொனாவை கட்டுப்படுத்த ஒரே வழி என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon