இரண்டாவது முழு பொது முடக்கத்தை எப்படி சமாளிக்கப் போகிறேன் – அப்புக்குட்டி
கொரொனா இரண்டாம் அலையால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக நடிகர் அப்புக்குட்டி தெரிவித்துள்ளார். கொரொனா பொது முடக்கத்தால் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து வரும் கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் அப்புக்குட்டி. இவர் ஹீரோவாக நடித்த அழகர்சாமியின் குதிரை படம் தேசிய விருது பெற்றது. விருது தனக்கு நிறைய பட வாய்ப்புகளை வாங்கித் தரும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் உண்மையில் அப்புக்குட்டிக்கு அதற்குப்பிறகும் பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் பூச்சிகாடு கிராமத்தில் உள்ள நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அப்புகுட்டி சினிமாவில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் இப்போதும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்.
சென்னை சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த அப்புகுட்டி இப்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சொந்த வீடு வாங்குவதற்கு வசதியில்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் அப்புகுட்டி இந்த கொரொனா இரண்டாம் அலையால் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.







