ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் நிதியுதவி..!
டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கொரொனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இதனை வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார். அத்துடன் டெல்லியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி அரசின் இந்த முடிவால் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுநர்கள் பயன்பெறுவார்கள். இலவச திட்டத்தின் கீழ் 75 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







