பிரதமர் நரேந்திர மோடி தான் உலகின் சிறந்த திகில் பட இயக்குநர் – இயக்குநர் ராம் கோபால் வர்மா
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் உலகின் சிறந்த திகில் பட இயக்குனர் என திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
கொரொனா தடுப்பு பணியில் மத்திய அரசு செயல்பாடு குறித்து திரைநட்சத்திரங்கள் பலரும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரொனா தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இது போன்ற அழகான திகிலூட்டும் காட்சிகளை தந்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.






