--- --:--:-- --

வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் முறை..!

1

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில், தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

 

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனி இட ஒதுக்கீடு கூண்டு அமைக்கப்பட்டு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் தேர்தல் பார்வை மேற்கொள்ளுமாறு அலுவலரும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 14 முகவர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

 

மேசையில் குறிப்பிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் எந்திரம் மட்டுமே வைக்கப்படும்.. பதிவான மொத்த வாக்குகள் மற்றும் பிற விபரங்கள் கட்டுப்பாட்டு எந்திரத்தில் பதிவாகியிருக்கும். அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் முகவர்களுக்கு வழங்குவார்.

 

ஒவ்வொரு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியதும் பதிவான வாக்குச்சாவடி விவரம் வேட்பாளர்கள் விவரம் பதிவான மொத்த வாக்குகள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. வாக்குப்பதிவு நாளன்று முகவர்களுக்கு கொடுக்கப்பட்ட விவரங்கள், வாக்கு எண்ணிக்கை ஒப்பிட்டு சரிபார்க்கப்படும்.

 

பதிவான மொத்த வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் முகவர்கள் கேள்விகள் கேட்பார்கள். பதிவான வாக்குகள் அறிவிக்கப்பட்ட பிறகு முடிவு அறிவிக்கப்படும். இதனையடுத்து இயந்திரம் பாதுகாப்பாக மூடி வைக்கப்படும். இந்த நடைமுறை 14 மேஜைகளில் முடிந்த பிறகு ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததாக கணக்கிடப்படும். இதனையடுத்து 14 மேஜைகளில் அடுத்த சுற்றுக்கான கட்டுப்பாடு எந்திரம் வைக்கப்பட்டு எண்ணப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon