மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது..!
தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கக் கூடிய இன்றைய தினத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் என்பது முழு வீச்சில் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் நான்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மதுரை மருத்துவ கல்லூரியில் மதுரை மேற்கு , வடக்கு, தெற்கு, மதுரை மத்திய ஆகிய 4 பகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மதுரை வேளாண் கல்லூரியில் மதுரை மேலூர், மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய இரு தொகுதிகளுக்கு தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, அதேபோல நாகமலை புதுக்கோட்டையில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் சோழவந்தான் உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.






