--- --:--:-- --

காலையில் நெகட்டிவ்…மதியம் பாசிடிவ் என முடிவு வந்ததால் இளைஞர் குழப்பம்..!

7

நெல்லை இளைஞருக்கு காலையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரொனா நெகட்டிவ் என முடிவு வந்த நிலையில் மதியம் நடத்தப்பட்ட சோதனையில் பாசிட்டிவ் வந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

நெல்லையை சேர்ந்த 29 வயதான இளைஞர் கடந்த 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு தனியார் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு கொரொனா நெகட்டிவ் என வந்துள்ளது.

 

அன்றைய தினமே மதியம் ஒரு மணியளவில் நெல்லை பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் பரிசோதனை மேற்கொண்டதில் கொரொனா பாசிடிவ் என வந்துள்ளது. குழப்பமடைந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது அரசு சார்பில் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு தான் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon