ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம்..!
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரொனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் வினியோகம் தொடர்பான சிக்கல்களை தீர்க்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், நர்சிங் ஹோம் உடனடியாக 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.






