--- --:--:-- --

முழு ஊரடங்கின் போதும் மெட்ரோ ரயில்கள் இயங்கும்..!

8

சென்னையில் நாளை முழு ஊரடங்கின் போது மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. மெட்ரோ ரயில்கள் 1 முதல் 2 மணி நேர இடைவெளியில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

அதன்படி சென்ட்ரல் கோயம்பேடு விமான நிலைய வழித்தடத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோன்று சென்ட்ரல் பரங்கிமலை வழித்தடத்தில் 2 மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் விமான நிலைய வழித்தடத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon