மே 1ஆம் தேதி முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்..!
தமிழகத்தில் மே 1ஆம் தேதி முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்ட இலவச தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 1ஆம் தேதி முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர் களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் பிராணவாயு வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






