வளிமண்டல சுழற்சி காரணமாக நான்கு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு..!
வளிமண்டல சுழற்சி காரணமாக நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி விருதுநகர் மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.







