தென்காசியில் பெய்த ஆலங்கட்டி மழை..!
தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரத்தில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து சிறிது நேரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துள்ளது .இதனால் பத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







