இரு மகன்களின் இறப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட தாய்..!
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த 18ஆம் தேதி காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் கடையின் உரிமையாளரான 60 வயதுடைய மோகன் என்பவரும் அவரது பேர குழந்தைகளான தனுஷ் மற்றும் தேஜஸ் ஆகிய இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் குழந்தைகளின் தாயாரான வித்யாலட்சுமி காட்பாடி அடுத்த லத்தேரி ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கடந்த இரண்டு மணி முதல் காணாமல் இருந்த வந்த நிலையில் உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிரமாக தேடி வந்தநிலையில் காட்பாடி ரயில்வே நிலையம் அருகே உள்ள லத்தேரி தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






