கொரொனா பாதித்தவர்களை உள்ளே வைத்து பூட்டிய மக்கள்..!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொரொனா பாதித்தவர்களை உள்ளே வைத்து சக குடியிருப்புகள் பூட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வீட்டில் தாய் தந்தை கொரொனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.
அவர்களது மகன் இரவு நேரத்தில் வெளியே சென்று பெற்றோருக்கு தேவையான மருந்துகளை வாங்கி வந்துள்ளார். இதனை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் மூவரையும் வீட்டிற்குள் வைத்து கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டனர்.
கதவைத் திறக்கும்படி எவ்வளவோ அவர்கள் கெஞ்சியும் யாரும் திறக்க முன்வராத நிலையில் தகவல் அறிந்து வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பூட்டைத் திறந்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தனர்.






