சிறுமியிடம் அத்துமீறியதாக நடிகர் டேனியல் மீது புகார்..!
17 வயது சிறுமியிடம் அத்துமீறிய தாக நடிகர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவரின் வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் கதாநாயகன் விஜய்சேதுபதிக்கு நண்பனாக நடித்து இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். லட்சக்கணக்கானோர் டானியலின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 17 வயது சிறுமியிடம் அத்துமீறி பேசியதாக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பகல் நேரங்களில் சாதாரணமாக கூறும் தகவல்களை அனுப்பவும் டானி இரவு நேரத்தில் சிறுமியின் போட்டோவை கேட்டு தொல்லை கொடுத்துள்ளதாகவும் சில நேரங்களில் வீடியோ கால் பேச வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் டானி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வழக்கறிஞர் டேனியல் விளக்கமளித்துள்ளார். அதில் கடந்த 4 நாட்களாக தனது தரப்பு மீது தவறான வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என்றும் சமூகவலைதளத்தில் அவருக்குள்ள நற் பெயரை களங்கப்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
எனவே அவரைப் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ பதிவுகள் போன்றவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் இல்லை என்றால் சைபர்கிரைம் வழியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.






