திரைப்பட நடிகர் விவேக்கிற்கு திடீர் நெஞ்சுவலி..! ஆஞ்சியோகிராம் சிகிச்சை..!
பிரபல திரைப்பட நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவேக்கிற்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு 48 மணி நேர கண்காணிப்பில் நடிகர் விவேக் உள்ளார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நேற்று சென்னை திரும்பிய சூழ்நிலையில் இன்று காலை அவருக்கு மயக்கமும் நெஞ்சு வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அவர் சென்னையில் உள்ள வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.






