--- --:--:-- --

18 பேரை கடித்த நாய்..! நாயை அடித்துக் கொன்ற பொதுமக்கள்..!

7

நாகை புதிய பேருந்து நிலையத்தில் நாய் கடித்ததில் பதினெட்டு பேர் காயமடைந்தனர். இதனால் பொதுமக்கள் அந்த நாயை அடித்தே கொன்றுள்ளனர். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் டீக்கடை உள்ளது. அதன் உரிமையாளர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

 

இவர் நேற்றிரவு தனது கடைக்கு நாயை அழைத்து வந்தார். கடையின் முன்பு நின்று கொண்டிருந்த நாய் திடீரென அங்கிருந்தவர்களை கடித்துள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளையும் கடித்து வைத்துள்ளது. இந்த நாய் கடித்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

 

அங்கிருந்தவர்கள் நாயை விரட்டவே நாகை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நாய் சென்றது. பின்னர் அங்கிருந்து புதிய பஸ் ஸ்டாண்டில் குமரன் கடைக்கு மீண்டும் வந்தது. இதையடுத்து சிலர் நாயின் கழுத்தில் சுருக்கு போட்டு பிடித்தனர்.

 

பின்னர் அதன் தலையில் அடித்துக் கொன்றன.ர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .நாய் கடித்து காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon