இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக கணவனை மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம்..!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக கணவனை மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துலுப்பதியை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் விபத்தில் சிக்கி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது மனைவி ஜோதிமணி உறவினர் ராஜா ஆகியோர் அவரை டிஸ்சார்ஜ் செய்து ஆம்னி வேனில் அழைத்துச் சென்றனர்.
அப்போது காரில் இருந்து புகை வந்ததாகவும் ரங்கராஜனை மீட்பதற்குள் கார் முழுமையாக தீப்பிடித்து எரிந்து விட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டபோது ரங்கராஜன் 3 கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு எடுத்து வந்ததும் அதில் நாமினியாக மனைவி பெயரை குறிப்பிட்டு இருந்ததால் கடன் தொல்லை மற்றும் இன்சூரன்ஸ் பாலிசிக்காக காலவரை எரித்துக் கொன்றது தெரியவந்தது.
இதனையடுத்து ஜோதிமணி மற்றும் அவரது உறவினரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.






