ஆந்திராவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை..!
ஆந்திர மாநிலத்தில் கொரொனா தடுப்பூசி 3 லட்சம் டோஸ்கள் மட்டுமே உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த மாநில முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரொனா தடுப்பூசி உள்ளிட்டவை குறித்த ஆய்வுக் கூட்டம் அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது.
அப்போது தடுப்பூசி 3 லட்சம் டோஸ்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் இரு தினங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் எனவும் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு வழங்கி தேவையான தடுப்பூசிகளை பெறுமாறு புதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






