கொரொனா காரணமாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்..!
கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இதன்படி திருவிழாக்கள் மற்றும் அதன் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய காய்கறி கடைகளிலும், சில்லறை வியாபாரக் கடைகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இடையிலான அரசு, தனியார் பேருந்துகள் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், வணிக வளாகங்கள், நகை ஜவுளி கடைகள் மற்றும் ஷோரூம்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்படலாம்.
உணவகங்கள், தேனீர் கடைகள் 50 விழுக்காடு இருக்கைகளுடன் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவு உண்ணலாம் என தெரிவித்துள்ள தமிழக அரசு உணவகங்களில் இரவு 11 மணி வரையும் பார்சல் சேவையை தொடரலாம் என கூறியுள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரங்குகளில் 200 நபர்களுக்கு மிகாமல் அரசியல், கல்வி கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தலாம். திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமலும் இறுதி ஊர்வலத்தில் 50 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும். பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என கூறியுள்ளது.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவதற்கு இ முறை கட்டாயம் என அரசு கூறியுள்ளது. வாகனங்களில் ஓட்டுநர் தவித்த மூன்று பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆட்டோக்களில் ஓட்டுநர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.






