--- --:--:-- --

காணாமல் போன மகள் மருமகளாக வந்த சம்பவம்..! அதிர்ச்சியில் மணமகன்..!

4

சீனாவில் மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த தாய் தனது வருங்கால மருமகள் தனது சொந்த மகள் என்ற உண்மையை அறிந்து அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். சீனாவின் சுஜோ நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

 

மருமகள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மணமகளின் தாயார் மருமகளின் கைகளில் இருந்த அடையாளத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது சொந்த மகள் என்பது தெரியவந்தது.

 

இதனையடுத்து மணப் பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகள் பெற்றெடுத்த மகள் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இதனைக்கேட்ட மணப்பெண் தனது தாயாரை கட்டிப்பிடித்து அழுதுள்ளார். மேலும் எப்படி தனது சகோதரியை திருமணம் செய்து கொள்வது என்று குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்தார் மணமகன்.

 

அப்போது அவரது தாயார் தனது மகன் பெற்றெடுத்த மகன் இல்லை என்றும் மகள் காணாமல் போனதால் தத்தெடுத்து வளர்த்து வந்ததாக தெரிவித்துள்ளார். இருவரும் ரத்த சம்பந்தமான உடன்பிறப்புகள் இல்லை என்பதால் இருவருக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

Leave a Reply

Right Menu Icon