--- --:--:-- --

தபால் வாக்கை சமூகவலைதளங்களில் வெளியிட்ட தன்னார்வலர்..!

7

மலூரில் தேர்தல் விதிகளை மீறி தபால் வாக்கை சமூகவலைதளங்களில் வெளியிட்ட தன்னார்வலர்களிடம் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கோவிந்தராஜ் என்பவர் அரசம்பட்டி காவல்துறையினருக்கு உதவியாக தன்னார்வலராக இருக்கிறார். இவர் தனது வாக்கை தபால் வாக்கு முறையில் பதிவு செய்துள்ளார். தபால் வாக்கு செலுத்திய போது செல்போன் மூலம் வீடியோ எடுத்து கோவிந்தராஜ் அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

 

யாருக்கு வாக்களித்தோம் என்ற தகவலை வெளியிடுவதும் தேர்தல் விதிகளை மீறும் செயலாகும். எனவே இந்த விதிமுறைகள் குறித்து ஓமலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா பிரியா விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Right Menu Icon