குட்டி ஜெயலலிதா, குட்டி எம்ஜிஆர் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அதிமுக வேட்பாளர் பொன் சரஸ்வதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஆன எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வேடமணிந்து சிறுவர்களுடன் சென்று திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் கடை வைத்துள்ள பெண்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.






