தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு அனல் காற்று வீசும்..!
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் நண்பகல் நேரத்தில் திறந்த வெளியில் பணி செய்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இதுவரை வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீசும் காற்று வெப்பம் மேலும் உயரும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை 12 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12 மணி முதல் 4 மணி வரை வேட்பாளர்கள் ,வாக்காளர்கள், விவசாயிகள், போக்குவரத்து காவலர்கள் மக்கள் திறந்த வெளியில் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.






