சமையலுக்கு அரிசி எண்ணெய் தான் வருங்காலத்தில் பயன்படுத்துவர்..!
அரிசியினால் தயார் செய்யப்படும் எண்ணெய் வகையை பயன்படுத்துவது வருங்காலத்தில் அதிகமாகும் என இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 75வது சுதந்திர கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய உணவு கழக தென்மண்டல மேலாளர் நசீம் விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலை பெறுவதையும் நுகர்வோர் தங்கள் உணவு தானியங்களை நியாயமான விலையில் பெறுவது உறுதி செய்வது தேசம் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி பேசினார்.
எதிர்காலத்தில் ஒருவர் மக்களுக்கு உணவு அளிப்பதில் அறிந்து அவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தி நிலைக்கு செல்ல வேண்டுமென்றும் அதற்கு இந்திய அரசு பொது விநியோக முறைமூலம் வலுவூட்டப்பட்ட அரசியல் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து செல்வதாக தெரிவித்தார்.






