விஜய் சேதுபதி ஷூட்டிங்கில் கொரொனா தடுப்பு விதிமீறலால் அபராதம்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பில் கொரொனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வில்லை என சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்தனர். காரமடைதோட்டம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்த தகவல் அறிந்து ஏராளமான மக்கள் விஜய்சேதுபதியை காண மண்டபம் முன்பு குவிந்தனர். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது படப்பிடிப்பு தளத்தில் முக கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளிஉள்ளிட்ட கொரொனாதடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






