--- --:--:-- --

பிரச்சாரத்தின் போது லேப்டாப் கிடைக்கவில்லை என புகார் எழுப்பிய மாணவி..!

1

ரத்தநாடு அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் பிரச்சாரம் செய்த போது மாணவி ஒருவர் தனக்கு லேப்டாப் கிடைக்கவில்லை என புகார் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார்.

 

நேற்றிரவு தெக்கூர் செல்லம்பட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்தபோது மாணவி ஒருவர் தான் 2018 ஆம் ஆண்டு பிளஸ் டூ படித்து தற்போது கல்லூரி படித்தும் இதுவரை லேப் டாப் கிடைக்கவில்லை என புகார் எழுப்பினார்.

 

இதையடுத்து அந்த மாணவியை அருகில் அழைத்து விசாரித்த வைத்தியலிங்கம் டெண்டர் பிரச்சினையால் விடப்பட்டிருக்கலாம் என்று லேப்டாப் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Leave a Reply

Right Menu Icon