--- --:--:-- --

கவர்ச்சி நடிகை ஷகீலா அரசியலில் குதித்தார்!! உடனே பதவியும் கிடைத்தது!

shakeela 03

ஒரு காலத்தில் ‘அடல்ட் ஒன்லி’ படங்களில் மட்டுமே நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கலைத்த கவர்ச்சி நடிகை ஷகீலா, காங்கிரஸ் இணைந்தார். இதையடுத்து, அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநிலப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

கடந்த 1990களில் வெளிவந்த மலையாள அடல்ட் ஒன்லி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கவர்ச்சி நடிகை ஷகீலா. இவரது படங்கள் ரிலீசாகும் நாட்களில் கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் படங்களே காற்று வாங்கும் என்று சொல்வார்கள்.

 

மலையாளத்தில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகை ஷகிலா நடித்துள்ளார். சமீப காலமாக சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக விஜய் டிவியில் வரும் “குக் வித் கோமாளி” என்ற சமையல் நிகழ்ச்சி, ஷகீலாவுக்கு புதிய அடையாளத்தை தந்தது.

இந்நிலையில், நடிகை ஷகிலா திடீரென அரசியலில் குதித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநிலப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, அத்துறையின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon