--- --:--:-- --

தேர்தலுக்காக 14 ஆயிரத்து 215 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..!

11

தேர்தலில் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வசதியாக 14 ஆயிரத்து 215 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் வாக்களிப்பதற்கு சொந்த ஊர்களை நோக்கி செல்வதற்கு ஏதுவாக ஏப்ரல் 1 முதல் 5ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சென்னையிலிருந்து தினசரி 3 ஆயிரத்து 90 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பண்டிகை நாட்களில் செயல்படுவது போல சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon