ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரொனா தடுப்பூசி..!
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரொனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பின்னர் காவலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றார். எனவே தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்து கொள்ள வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.






