--- --:--:-- --

சட்டைகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ராஜேந்திரன்..!

13

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரன் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் சென்று அங்கிருந்த சட்டைகளுக்கு இஸ்திரி போட்டு கடை உரிமையாளரிடம் வாக்கு சேகரித்துள்ளார்.

 

இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மசூதிகளில் தொழுகை முடித்துவிட்டு இஸ்லாமியர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு துண்டுபிரசுரங்கள் கொடுத்தார். சால்வை அணிவித்தும் வாக்கு சேகரித்தார்.

 

பிரச்சாரத்தின் போது அந்த பகுதியில் உள்ள பெண்கள் வேட்பாளர்களுக்கு மலர்தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon