பரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்..!
சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அசோக் பரோட்டா கடையில் பரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த 4 நாட்களாக வேளச்சேரிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.
தரமணி பகுதியில் உள்ளபெரியோர்களின் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த பரோட்டா கடையில் பரோட்டா போட்டு கடை ஊழியர்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மக்கள் அனைவருக்கும் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்து அசோக்கின் ஆதரவாளர்கள் குறிக்கும் சின்னம் இரட்டை இலை என கூறினார்.






