விமானத்தில் நடுவானில் பெண்ணிற்கு நடந்த பிரசவம்..!
பெங்களூருவில் இருந்து ஜெய்ப்பூருக்கு சென்ற இன்டிகோ விமானத்தில் நடுவானில் பெண் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது. விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த பொண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் இருந்த பெண் மருத்துவர் சுபஹானா நசீர் உதவியுடன் விமான பெண் ஊழியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இதனிடையே ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தாயும் சேயும் நலமாக இருக்கும் நிலையில் ஜெய்ப்பூர் வந்த மருத்துவர் சுபஹானாவுக்கு இண்டிகோ நிறுவனம் நன்றி தெரிவித்தும் வாழ்த்து அட்டையை வழங்கி கவுரவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





