--- --:--:-- --

பல்லியின் பிடியில் சிக்கிக் கொண்ட பாம்பு..!

2

தாய்லாந்தில் சரபுரி மாகாணத்தில் பல்லியின் பிடியில் இருந்த பாம்பு நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் மீட்க்கப்பட்டது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல சிறிய பல்லியும், பாம்பும் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது பாம்பு பல்லியின் உடலை சுற்றிக் கொண்டது.

 

இதனால் பள்ளி பாம்பின் உடலை இறுக்கமாக கவ்வி கொண்டது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் பல்லியையும் பாம்பையும் பிடிக்க முயற்சித்தனர். இதற்காக பள்ளியின் தலையில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்தனர். சுண்ணாம்பு வைத்தனர்.

 

தொடர்ந்து தண்ணீரை ஊற்றினர். ஆனால் எதற்கும் மசியாத பல்லி புகையிலை தண்ணீர் ஊற்றியவுடன் பாம்பின் பிடியிலிருந்து விட்டது.

Leave a Reply

Right Menu Icon