காரை ஓட விட்டு கார் மீது ஏறி தண்டால் எடுத்த இளைஞருக்கு போலீசார் அபராதம்..!
உத்திரபிரதேசத்தில் காரை ஓட விட்டு அதன் மீது தண்டால் எடுத்த இளைஞருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அந்த மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தானே இயக்கிய மகேந்திரா ஸ்கார்பியோ காரில் இருந்து வெளியேறி பின்னர் காரின் மேல் பகுதிக்கு சென்று தண்டால் எடுத்துள்ளார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞரை பிடித்த காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் தான் செய்தது தவறு என்று அந்த இளைஞன் கூறுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.






